மாணவர்-மாணவிகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு அறிவியல் மையங்கள் சார்பில் ஆண்டுதோறும் புத்தாக்கப் பயிற்சியும், அறிவியல் மாதிரிகள் செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் தொடங்கிவைத்தார். காகிதங்கள், பாலிதீன் பைகள், மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்படும் எளிய அறிவியல் மாதிரிகள் செய்து காண்பிக்கப்பட்டன. கல்வி அலுவலர் மாரிலெனின் பயிற்சியளித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்-ஆசிரியைகள் பயிற்சியில் பங்கேற்றனர்
மாவட்ட அறிவியல் மையத்தில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க மற்றும் அறிவியல் மாதிரிகள் செய்முறை பயிற்சி
Saturday, October 27, 2018
மாணவர்-மாணவிகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு அறிவியல் மையங்கள் சார்பில் ஆண்டுதோறும் புத்தாக்கப் பயிற்சியும், அறிவியல் மாதிரிகள் செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் தொடங்கிவைத்தார். காகிதங்கள், பாலிதீன் பைகள், மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்படும் எளிய அறிவியல் மாதிரிகள் செய்து காண்பிக்கப்பட்டன. கல்வி அலுவலர் மாரிலெனின் பயிற்சியளித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்-ஆசிரியைகள் பயிற்சியில் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment