அன்னவாசல்,அக்.25 : புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி மூலம் வட்டார அளவில் பெற்றோர்களுக்கான இரண்டு நாள் விழிப்புணர்வு பயிற்சி இலுப்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது..
பயிற்சியினை அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு தொடங்கி வைத்தார்.இலுப்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை வகித்து பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இப்பயிற்சியில் மூளைகாய்ச்சல் விழிப்புணர்வு,மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் அதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகள், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்குரிய சட்டங்கள் மற்றும் அரசின் உதவித் திட்டங்களும் ,தொழில்கல்வியும் ஆகிய தலைப்புகளின் கீழ் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சுகாதார துறையில் இருந்து பரம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் முத்துப்பிரியா,இலுப்பூர் அரசுமருத்துவமனை
மருந்தாளுநர் மணிகண்டன்,மருத்துவ ஆலோசகர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இப்பயிற்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு தேநீர், உணவு மற்றும் பயணப்படிக்கான மதிப்பூதியம் வழங்கப்பட்டது...
இப்பயிற்சியின் கருத்தாளர்களாக தசை இயக்க பயிற்சி நிபுணர் கோவிந்தசாமி மற்றும் சிறப்பாசிரியர்கள் பாஸ்கரன்,அருள்மேரி,
எமெல்டாராணி ஆகியோர் செயல்பட்டனர்.
இப்பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment