எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

காலாண்டு விடைத்தாள்கள் ஆய்வு; அதிக மதிப்பெண் வழங்கியது , கவனக்குறைவுடன் திருத்தியது போன்றவற்றிற்காக ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க முடிவு

Saturday, October 13, 2018




 மதுரையில் விடைத்தாள்கள் திருத்தியதில் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 6 --12ம் வகுப்பு வரை ஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் கூர்ந்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் அதிக மதிப்பெண் வழங்கியது, கவனக்குறைவுடன் திருத்தியது உட்பட பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

கவனக்குறைவு ஆசிரியர்களிடம் தலைமையாசிரியர் மூலம் விளக்கம் கேட்கப்படும். நன்றாக திருத்திய ஆசிரியர் பாராட்டப்படுவர். சிறந்த பள்ளிகள் பட்டியல் வெளியிடப்படும். 'ஆப்பரேஷன் இ' திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

சரியான நேரத்திற்கு ஆசிரியர் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த ஆய்வில் 6-8 ம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் மற்றும் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் கண்காணிக்கப்படுகின்றன. மூன்று கல்வி ஒன்றியங்களில் ஆய்வு முடிந்துள்ளது. 12 ஒன்றியங்களில் அடுத்தடுத்து நடத்தப்படும், என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One