ஆம்பூர் அருகே ‘மாதிரி வாரச் சந்தை’ நடத்தி அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுமக்களை அசத்தினர்.
ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் ஊராட்சியில் அரசு மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இப் பள்ளியில், 400-க்கும் மேற் பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் ‘மாதிரி வாரச் சந்தை’யை மாணவர்கள் நடத்தினர்.
இதில் தக்காளி, கத்திரி, வெண்டை, உருளை, நிலக்கடலை, மிளகாய், முருங்கை, அவரை மற்றும் கீரை வகைகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற்று அதை சந்தைப்படுத்தினர்.
காய்கறிகள் மட்டுமின்றி சிறு தானிய வகைகளும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தன. மாதிரி வாரச் சந்தையை காண வந்த பெற் றோர் மற்றும் பொதுமக்கள், மாணவர்களிடம் பணம் கொடுத்து தேவையான காய்கறி மற்றும் தானிய வகைகளை வாங்கிச் சென்றனர்.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது, "விவசாயிகள், வியாபாரிகளின் துன்பங்களை உணர்ந்து கொள்ளவும், பொதுமக்களிடம் உற்பத்திப் பொருட்களை எவ்வாறு கொண்டு போய் சேர்ப்பது என்பது குறித்து மாதிரி வாரச்சந்தை எங்கள் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
இதில், அனைத்து வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட காய்கறி மற்றும் தானிய வகைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்தோம்.
இதன் மூலம் சந்தைகள் செயல்படும் விதம், பொருட்களை விற்பனை செய்வது, எடையளவு சரிபார்ப்பது, பொருட்களுக்கான பணத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்பது பற்றி தெரிந்துக்கொண்டோம்" என்றனர்.
முன்னதாக, மாதிரி வாரச்சந்தையை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகுமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கனகா செய்திருந்தார். மாதிரி வாரச்சந்தையில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப் பட்டிருந்தன
No comments:
Post a Comment