பகுதி நேர ஆய்வு படிப்புகளில் சேர, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சேலம், பெரியார் பல்கலை, உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில், பகுதிநேர பிஹெச்.டி., எம்.பில்., ஆய்வு படிப்புகள் உள்ளன. இவற்றில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் படிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டில், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நிலையில், பெரியார் பல்கலை கட்டுப்பாட்டில் வரும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே, இதில் சேர முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு மாவட்டங்களிலிருந்து, ஆய்வு படிப்புக்கு விண்ணப்பித்து, நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து, சில ஆசிரியர்கள் கூறியதாவது: வேறு மாவட்டங்களிலிருந்து, தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடத்திவிட்டு, ஒருநாள் கூட வகுப்புக்கு வராமல், பகுதிநேர ஆய்வுப்படிப்பை முடிக்கும் நிலை உள்ளது. தற்போது, நான்கு மாவட்டங்களுக்குள் பணி புரிபவர்கள் மட்டுமே, பகுதி நேர ஆய்வு படிப்பில் சேர முடியும் என அறிவித்துள்ளது, பல முறைகேடுகளை தடுக்கும். வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், இதுகுறித்து, பல்கலை நிர்வாகம் முன்பே அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். விண்ணப்பத்தை ஏற்று, நுழைவுத்தேர்வு நடத்தி, நேர்காணலுக்கு பின், தேர்வு முடிவுக்கு காத்திருக்கும்போது அறிவிப்பதால், பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த அந்த பணிபுரியும் மாவட்டத்தில் சேரலாமா? இடையில் பணி மாறுதல் நடநாநடந் என் செய்வது
ReplyDelete