எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.18

Thursday, November 1, 2018


திருக்குறள்


அதிகாரம்:விருந்தோம்பல்

திருக்குறள்:89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

விளக்கம்:

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

பழமொழி

A cat may look at a king

 ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும். (ஆ-பசு; பூ நெய்-தேன் )

இரண்டொழுக்க பண்பாடு

* ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் என்னால் முடிந்த வரை பொருளாலும் உடலாலும் உதவி செய்வேன்.

* என்னால் முடிந்த வரை பொய் சொல்லாமல் நேர்மையாக இருக்க முயற்சி செய்வேன்.

 பொன்மொழி

இயற்கையுடன் ஒத்துப்போனால் உடல்நலம் பாதித்தாலும், அதை தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும் தன்மை உடலுக்கு கிடைத்து விடும்.

        - வேதாத்ரி மகரிஷி

பொது அறிவு

1.கிரிக்கெட்  மை  ஸ்டைல்  என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

 கபில்தேவ்

2. இந்தியாவின் தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் யார்?

 ஹர்ஷவர்தன்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

குதிரைவாலி அரிசி




1. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை குணப்படுத்தும்.

2. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது.

3.நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

English words and meaning


Unaided.     தனித்த
Umpire.       நடுவர்
Unfurl.         பிரி,திற,விரி...
Utensil.       பாத்திரம்
Urge.            தூண்டுதல்

அறிவியல் விந்தைகள்

ஒட்டகம்

* பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் எனது வாழிடம் பாலைவனம் தான். எனது வசிப்பிடம் பாலைவனமாதலால் அதன் வெயில் என்னை வாட்டுமே எனப் பயந்தேன்.
* ஆனால் எனது தோல் வெயில் காலத்தில் சூரிய ஒளியை எதிரொளித்து விடும் எனவே அதிக வெப்பம் என்னைத் தாக்காது. குளிரையும்என் தோல் தாங்கிக் கொள்ளும்.
* பாலைவனப் புயலிலிருந்து என் கண்களைக் காக்கும்படியாக மூன்று சோடி கண் இமைகள் உண்டு. மூக்கிலும் மூடித் திறக்கும் படியான அமைப்பு உண்டு.
* எனது திமிலில் கொழுப்பு சேர்த்து வைக்கும் அமைப்பு உள்ளதால் என்னால் இரண்டு வாரங்களுக்கு உணவு மற்றும் நீர் இல்லாமல் வாழ முடியும்

நீதிக்கதை

வீண் உபதேசம்

ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன.

குளிர்காலத்தில்  ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.

கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று.

நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது.

அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று.

மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.

மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன.

பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன.

ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்

பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன.

மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது,

பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று.

உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.

பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது.

இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.

( தீய குணம் படைத்தவர்களுக்கு உபதேசம் செய்வதே வீண் வேலை )

இன்றைய செய்திகள்

01.11.18

* ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய 2 வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* செல்போன் செயலி மூலம் ரயிலில் டிக்கெட் எடுக்கும் முறை இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது utp app மூலம் இனி எங்கிருந்தாலும் ரயில் பயணம் செய்ய  பயணச்சீட்டு எடுக்க முடியும்.

* மத்திய கிழக்கு நாடான, துருக்கியின், இஸ்தான்புல் நகரில், உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

*  தமிழகத்தில் தீபாவளியன்று அதிகாலை 4 முதல் 5 மணி; இரவு 9 முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

* மேற்கிந்திய தீவுகள் அணியுடன்  வியாழக்கிழமை நடைபெறும் 5-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடக்கும் 5-வது வீரர் என்ற மைல்கல்லை தோனி எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Today's Headlines

🌻The Madras High Court has ordered interim bans for 2 weeks to sell drugs online.

🌻The Railway ticket can be obtained through  cellphone by using 'utp app 'from today onwards, no ​​matter where you are traveling .

🌻 The largest airport in the world is built in the Middle East, Turkey, in Istanbul.

🌻The supreme court ordered on Diwali festival ,in Tamilnadu, people can cracks the crackers from 4 am to 5am and 9 to 10 pm


🌻 Dhoni is expected to be the fifth player to cross the 10,000-runs for the Indian team in the fifth one-day match against the West Indies on Thursday🤝

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One