நாளை மறுநாள் ஒரே விண்கலத்தில் 31 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ.
வேளாண்மை, வனப்பகுதி, கடலோரப் பகுதி, உள்நாட்டு நீர்நிலைகள், மண் வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் இமேஜிங் சக்தியுடன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்த ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள ஆப்டிக்கல் இமேஜிக் டிடெக்டர் அரே சிப்பை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் எலக்ட்ரானிக் பிரிவும், சண்டிகரில் உள்ள செமி கண்டக்டர் ஆய்வு மையமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த செயற்கைக்கோள் 380 கிலோ எடை கொண்டது. இது விண்ணிலிருந்து பூமியிலுள்ள பகுதிகளின் எலக்ட்ரோமேக்னடிக் அலைக்கற்றைகளிலிருந்து தகவல்களைச் சேகரித்து அனுப்பும். இதனுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைகோள்களும் அனுப்பப்படவுள்ளன. பிஎஸ்எல்வி சி43 என்ற விண்கலத்தின் மூலமாக, இந்த செயற்கைக்கோள்கள் நாளை மறுநாள் (நவம்பர் 29) காலை 9.59 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளன. இவற்றில் 23 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, ஸ்பெயின், பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கைளையும் விண்ணில் ஏவும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது இஸ்ரோ.
இஸ்ரோவின் ஜிசாட்-11 என்ற 5.7 டன் எடையுள்ள வர்த்தகச் செயற்கைக்கோள், பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 விண்கலம் மூலம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது
Very useful information
ReplyDelete