மாநிலம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைந்த 31,266 பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மானியமாக ₹93.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைந்த அரசுப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மானியம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை மீண்டும் வழங்க அரசு முடிவு செய்து தற்போது ₹100 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. அதன்படி, 15 முதல் 100 மாணவர்கள் வரை படிக்கும் 21 ஆயிரத்து 378 பள்ளிகளுக்கு தலா ₹25 ஆயிரம் வீதம் மொத்தம் ₹53 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரமும், 100 முதல் 250 மாணவர்கள் வரை உள்ள 6 ஆயிரத்து 167 பள்ளிகளுக்கு தலா ₹50 ஆயிரம் வீதம் மொத்தம் ₹30 கோடியே 83 லட்சத்து 50 ஆயிரமும், 250 முதல் ஆயிரம் மாணவர்கள் வரை உள்ள 714 பள்ளிகளுக்கு தலா ₹75 ஆயிரம் வீதம் மொத்தம் ₹5 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரமும், ஆயிரம் மாணவர்களுக்கு மேல் படிக்கும் 4 பள்ளிகளுக்கு தலா ₹1 லட்சம் என ₹4 லட்சமும் நிதி வழங்கப்படுகிறது.
இதுதவிர 1 முதல் 14 மாணவர்கள் வரையே படிக்கும் 3 ஆயிரத்து 3 பள்ளிகளுக்கு தலா ₹12 ஆயிரத்து 500 வீதம் ₹3 கோடியே 75 லட்சத்து 37 ஆயிரத்து 500ம் நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலம் முழுவதும் மொத்தம் 31 ஆயிரத்து 266 பள்ளிகளுக்கு ₹93 கோடியே 42 லட்சத்து 87,500 நிதி வழங்கப்படுகிறது. இந்தநிதி மூலம் பள்ளிகளுக்கான அத்தியாவசிய சில்லரை செலவினங்களை மேற்கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment