கடத்தூர் அருகே ரேகடஅள்ளி அரசு பள்ளிக்கு, ₹4லட்சம் மதிப்பீட்டில் கம்ப்யூட்டர், நூலகம் அமைத்து கொடுத்த கணித ஆசிரியரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டினார்.
கடத்தூர் அருகே ரேகடஅள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றும் கணிதஆசிரியர் மதனகோபால், மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ₹4 லட்சம் மதிப்பீட்டில், கம்ப்யூட்டர் மற்றும் புதிய நூலகத்தை அமைத்து கொடுத்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் மதனகோபால், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி ேநரில் சென்று பாராட்டினார். அவருடன் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், வட்டார கல்வி அலுவலர் குழந்தைவேல், தங்கவேல், துளசிராமன், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலில் மற்றும் இருபால் ஆசிரியர் கலா, ரவிசந்திரன், லதாமகேஷ்வரி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியரை பாராட்டினர்.
No comments:
Post a Comment