எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேர்தல் பணி அலுவலர்கள் பட்டியல் : 48 மணி நேரத்தில் வழங்க உத்தரவு

Wednesday, November 14, 2018




 'லோக்சபா தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை 48 மணி நேரத்திற்குள் தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும், என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை துவங்கி உள்ளன. இதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை சேகரித்து பட்டியலிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.தேனி தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:



தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி லோக்சபா தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர், மண்டல அலுவலர்கள், பயிற்சி அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் , பறக்கும் படையினர் உள்ளிட்ட தேர்தல்பணியாற்ற உள்ள அனைத்துத்துறை அலுவலர்களின் முழு விபரங்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வருகிறோம்.இதனை இன்று காலையில் இருந்து (நேற்று) 48 மணி நேரத்திற்குள் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் தனியாக மிக அதிக பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் ஏற்கனவே நடந்த தேர்தல்களில் அங்கு பணிபுரிந்த அலுவலர்களின் விபரங்களும் சேகரிக்கப்படுகிறது,' என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One