கேரள மாநிலத்தில், முதியோருக்கான தேர்வில்,
96 வயது பாட்டி, 98 சதவீத மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
கேரளாவில், எழுத, படிக்க தெரியாத முதியோருக்கு எழுத்தறிவு அளிப்பதற்காக, மாநில எழுத்தறிவு இயக்கத்தின், 'அக் ஷராலக் ஷம்' திட்டம் துவங்கப் பட்டது.இந்த திட்டப்படி, ஐந்து நிலைகளில் முதியோருக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் சேரும் முதியோருக்கு, தாய்மொழியில் எழுத, படிக்கவும், அடிப்படை கணிதமும் கற்றுத் தரப்படுகின்றன.சமீபத்தில், மாநில அரசு நடத்திய தேர்வை, 43 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில், 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.நான்காம் நிலை தேர்வில், கார்த்தியாயினியம்மா, 96, என்ற பாட்டி, 98 சதவீத மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தார்.
இன்று, முதல்வர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில், கார்த்தியாயினியம்மாவுக்கு, முதல்வர் பினராயி விஜயன், சான்றிதழ் வழங்கவுள்ளார். கோவில்களில் துப்புரவு பணி செய்து வரும் கார்த்தியாயினியம்மா, அடுத்ததாக, ஆங்கிலம் கற்க விரும்புவதாக கூறியுள்ளார்
No comments:
Post a Comment