பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தனித் தேர்வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: பள்ளிக் கல்வித்துறை அண்மையில் வெளியிட்ட அரசாணையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பொதுத் தேர்வெழுதி தோல்வியுறும் மாணவர்களுக்கு 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் மார்ச்-ஏப்ரல் பொதுத் தேர்வு, ஜூன்- ஜூலை பருவ சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தவும், பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு (தனித் தேர்வர்கள்) செப்டம்பர்- அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எனவே 2019-ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் அந்த மூன்று வகுப்புகளுக்கும் துணைத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. தற்போதுள்ள நடைமுறையின்படி மார்ச்-ஏப்ரல் பருவத்தில் நடத்தப்படும் பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவும், தனித்தேர்வராகவும் எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும் ஜூன், ஜூலை சிறப்பு உடனடித் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அரசாணையின்படி செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வு ரத்து செய்யப்படுவதால் வரும் 2019 ஜூன், ஜூலை முதல் மார்ச் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும், ஜூன், ஜூலை பருவத்தில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 உடனடி சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வெழுதலாம் என கூறியுள்ளார்
No comments:
Post a Comment