அண்ணா பல்கலையின், சென்னை வளாகத்தில் உள்ள, மூன்று இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்கள் முன்னிலையில், விடைகளை மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மறுமதிப்பீட்டில் ஏற்பட்ட ஊழல் பிரச்னை, இன்ஜினியரிங் மாணவர்களை, கலக்கம் அடைய செய்துள்ளது. மறுமதிப்பீடுஇந்த பிரச்னை குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது; ஆனால் விசாரணை கிடப்பில் உள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலையின் வளாகத்தில் உள்ள, மூன்று இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர்கள் முன்னிலையில், மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி ஆகியவற்றில், தேர்வு பணிகளை, அண்ணா பல்கலையில் உள்ள, கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.இதுவரை, மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தால், பல்கலை ஆசிரியர்கள், அவற்றை திருத்துவர். அதிலும், மதிப்பெண் பிரச்னை இருந்தால், கூடுதல் ஆசிரியர்கள் இணைந்து, விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வர்.
இந்நிலையில், மாணவர்கள் முன்னிலையில், துறை தலைவர் மற்றும் ஆசிரியர்கள் குழு இணைந்து, விடைத்தாளை திருத்தம் செய்வதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது.புகார்மாணவர்கள், தங்கள் முன்னிலையில், விடைத்தாளை திருத்துவதற்கு, 3,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த முடிவால், பெரிய மாற்றம் ஏற்படப் போவதில்லை என, அண்ணா பல்கலை மாணவர்கள் தெரிவித்தனர். மறுமதிப்பீட்டில் நடந்த ஊழல் என்பது, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகளுக்கான தேர்வுத் துறையில் நடந்தது.முறைகேடு நடந்த, தேர்வு துறையில் மாற்றம் செய்யாமல், மூன்று கல்லுாரிகளுக்கு மட்டும், மதிப்பீட்டு முறை மாற்றப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது அதிகரித்து, அண்ணா பல்கலைக்கு வருவாய் அதிகரிக்கும்; முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வராது என, மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment