தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ மாணவிகளைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், மதுரையில் இருந்து நேற்று 150 மாணவர்கள் சுற்றுலா விழிப்பு உணர்வில் கலந்துகொண்டனர். இதுதொடர்பாக மதுரை சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன் கூறுகையில், ``அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கிவருகின்றனர். ஆனால், தனியார் பள்ளி மாணவர்களைப் போல் சுற்றுலாத் தலங்களுக்கோ, வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவதற்கோ வாய்ப்புகள் இல்லாத நிலை இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று விழிப்பு உணவர்களை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம், நினைவுச் சின்னங்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசு சுற்றுலாத்துறை திட்டத்தை உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment