எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி

Thursday, November 29, 2018




கோவை, : பாரதியார் பல்கலையில், மூடப்பட்ட தனியார் தொலைதுார கல்வி மையங்களுக்கு, 2018- - 19ம்
ஆண்டில் மாணவர் சேர்க்கையை அனுமதித்து, சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலையின் புதிய துணைவேந்தர் தேடல் குழு பிரதிநிதியை தேர்வு செய்வதற்கான, சிண்டிகேட் கூட்டம், நேற்று சென்னையில், உயர்கல்வித் துறை செயலர், மன்கத்ராம் சர்மா தலைமையில் நடந்தது. சிண்டிகேட் பிரதிநிதியாக, சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர், தியாகராஜன், தேடல் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தில், தொலைதுார கல்வி மையத்தின் கீழ் உரிய அங்கீகாரம், அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வந்த தனியார் மையங்கள் அனுமதி கேட்பது குறித்து, விவாதிக்கப்பட்டது. பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பாததால், 335 மையங்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.தொலைதுார கல்வி மையத்தை நடத்த, பாரதியார் பல்கலைக்கே அங்கீகாரம் இல்லை என்ற நிலையில், மூடப்பட்ட தனியார் மையங்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தகுதிக்கான சான்றிதழ், ஒரு போதும் பரிசீலிக்கப்படாது என அறிந்தும், பல்கலையின் இச்செயல்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில், ''தொலைதுார கல்வி முறையில், சில தனியார் மையங்களுக்கு, 2018 - -19ம் ஆண்டுக்கு மட்டும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ''இந்தாண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் கல்வியை முடிக்கும் வரை, மையங்கள் செயல்படும். அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியில்லை,'' என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One