எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இனி யாரும் தப்பமுடியாது.! வாட்ஸ் அப் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Wednesday, November 14, 2018


இன்றைய சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.

சமீபகாலமாகவே வாட்ஸ் அப் வழியாக பரப்பபடும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் வதந்திகளால், சில அப்பாவிகள் பலியாகினர். இதையடுத்து, மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படையில், தவறான தகவல் அதிகப்படியாக பரவாமல் இருக்க, ஒருவர் ஒரே நேரத்தில் வாட்சப்பில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்று வாட்சப் நிறுவனம் அறிவித்தது.

மேலும், வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை தெரிவிக்கையில், ''வாட்சப்பில் வதந்தி மற்றும் தவறான செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி வேண்டும் என வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இது தொடர்பாக அவர் தொழில்நுட்ப குழுவுடன் ஆலோசித்து, பின், பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தவறான தகவல்களை பரப்புவோரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த அணைத்து தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளதாக'' தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் பரவும் பொய் செய்திகளை களையெடுக்க, உலகம் முழுவதும் 20 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ''வாட் அப்பில் பொய் செய்திகள் எவ்வாறு பரவுகிறது என்றும், அதனை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்தியய உட்பட உலகம் முழுவதும் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இந்திய நாட்டை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள்'' என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One