எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாநில அளவிலான தடகளப்போட்டியில் சாதனைப்படைத்த மாணவிக்கு குழந்தைகள் தினவிழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டு!!!

Wednesday, November 14, 2018


மாநில அளவிலான தடகளப்போட்டியில் சாதனைப்படைத்த மாணவிக்கு குழந்தைகள் தினவிழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு.            புதுக்கோட்டை,நவ14-        புதுக்கோட்டை நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா மற்றும் மாநில அளவில் தடகளப்போட்டியில் சாதனைப்படைத்த மாணவிக்கு பாராட்டு விழா ஆகியவை நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து பேசும்போது கூறியதாவது, கடந்த வாரம் கடலூர் மாவட்டம்,நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான 3000  மற்றும் 1500 மீட்டர் தடகளப்போட்டியில் முதலிடம் பிடித்து சாதனைப்படைத்து இப்பள்ளிக்கும்,புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமைச்சேர்த்திருக்கிற  இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் எம்.அனுஷா என்ற மாணவிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த மாதம் பீகார் மாநிலம்,பாட்னாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்திட வாழ்த்துகிறேன்..போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுடன் கலந்துகொள்பவர்களும் சிறப்பானவர்கள்.ஆகையால் அவ்வப்போது நடைபெறும் பல்வேறு வகையான போட்டிகளில் அதிக அளவில் மாணவர்கள் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். மேலும் மாநில அளவிலான தடகளப்போட்டியில் முதலிடம் பிடித்த அனுஷாவிற்கு பதக்கம்,கோப்பை, சான்றிதழினை வழங்கியும்,பொன்னாடை அணிவித்தும்  பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,பள்ளியின் தலைமையாசிரியை ஜி.தனலெட்சுமி,ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One