எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை புயல் நிவாரணத்திற்கு அளித்த மாணவி

Wednesday, November 28, 2018


ஓசூர் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை, 'கஜா' புயல் நிவாரணத்துக்கு, தனியார் பள்ளி மாணவி வழங்கினார்.புயலால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், 25ம் தேதி இரவு, ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் இருந்து நிவாரண பொருட்கள், அனுப்பப்பட்டன.அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகள் லட்சிதா, 8, சைக்கிள் வாங்க, சேர்த்து வைத்த, 1,000 ரூபாயை, தே.மு.தி.க., மாவட்ட பொறுப்பாளர் முருகேசனிடம் வழங்கினார்.'தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வரும் லட்சிதா, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வந்த கஜா புயல் பாதிப்பு செய்திகளை பார்த்து, நிவாரணத் தொகையை வழங்கியுள்ளார்' என, அவரது பெற்றோர் கூறினர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One