புதுக்கோட்டையில் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் 200 ஆசிரியர்களுக்கு கணினி வளங்களை கையாண்டு இணையவழியில் கற்பிக்கும் 2 நாள் பயிற்சி நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா தலைமை வகித்து பேசுகையில், கிராமப்பகுதி மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தும் வகையில் கல்வி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் ஆசிரியர்கள் தனித்திறன் மிக்கவர்களாக விளங்க வேண்டும். ஒரு விடைக்கு பல்வேறு வினாக்களை மாணவர்கள் உருவாக்கும் திறன்களை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என்றார்.
பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் பேசினார். கருத்தாளர்களாக செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் காசிராஜன், இலைகடிவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் காசிவிஜயன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
No comments:
Post a Comment