எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

முன்னாள் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கு செய்யும் கைமாறு!. குவிந்துவரும் பாராட்டுக்கள்!.

Sunday, November 4, 2018


புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா அன்னவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 2003- 2004 ஆம் ஆண்டு பயின்ற பழைய மாணவர்களால், அந்த பள்ளிகளில் படிக்கும் 50 ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு தீபாவளிக்காக புத்தாடை வழங்கப்பட்டது.
இதற்கான நிதி மற்றும் ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் செய்து இருந்தனர். ஏழை மாணவ மாணவிகளுக்கு தீபாவளிக்காக புத்தாடை வழங்கும் விழாவில் அப்பள்ளியின் இரு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கு பெற்றனர்.


புத்தாடை வழங்கிய முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் நோட், எழுதுகோல், சீருடை போன்றவற்றை கொடுத்து உதவி வந்தனர்.
கடந்த வருடத்தில் இருந்து ஏழை மாணவ மாணவியருக்கு தீபாவளிக்காக புத்தாடை வழங்கிவருகின்றனர்.


அந்த முன்னாள் மாணவர்களின் செயலால் அப்பகுதி மக்கள் அந்த முன்னாள் மாணவர்களை பாராட்டி வருகின்றனர். அதே போல் அணைத்து பள்ளிகளிலும் படித்த முன்னாள் மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளிக்கு இதுபோன்ற உதவிகளை செய்தால் ஏழை மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் என கூறுகின்றனர்

1 comment

  1. Great.i have this idea to implement in my school

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One