2012-ம் ஆண்டு அரசு நியமித்த கலை ஆசிரியர்களின் நியமனத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவலறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில் அடிப்படையில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கலை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அரசு விதிமுறைகளை மீறி தகுதி இல்லாதவர்களை பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கலை ஆசிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் 8-ம் வகுப்பு வரை தையல், இசை உள்ளிட்ட கலை படங்களை கற்பிக்க 2012-ம் ஆண்டு அனைவர்க்கும் கல்வி இயக்கம் சார்பில் 16,546 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் 6 மாவட்டங்களில் 200 தகுதில்லாத கலை ஆசிரியர்கள் பகுதி நேர அடிப்படையில் தற்போது அரசுப்பள்ளிகளில் பணியாற்றிவருவதாக கலை ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment