எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்' : டி.என்.பி.எஸ்.சி., அறிவுரை

Saturday, November 3, 2018




 'குரூப் - 1 தேர்வில், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் - 1ல் அடங்கிய, பல்வேறு பதவிகளுக்கான, முதல் நிலை தகுதி தேர்வை, 2017 பிப்., 19ல், நடத்தியது. இதன் முடிவுகள், 2017 ஜூலை, 21ல், வெளியாகின. இதையடுத்து, பிரதான தேர்வு, அக்., 13, 14, 15ம் தேதிகளில் நடந்தது. தேர்வு முடிவுகளை, டிசம்பர் இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணி, மிக நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும், நடைபெற்று வருகிறது.இதுகுறித்து, அவ்வப்போது வெளியாகும் தவறான மற்றும் அவதுாறான தகவல்கள் குறித்து, தேர்வர்கள் கவலைப்பட தேவை இல்லை. ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின், தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One