மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு. 2பேர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.
புதுக்கோட்டை,நவ,29- தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலங்களில் ஆன் லைன் (இணையதளம் வாயிலாக) மூலமாக நடைபெற்றது.
இதில் தகுதியுள்ள உயர்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்,முதுகலைஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.அந்த முறையில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடந்த து.இந்த கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியுள்ள இரண்டு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.இதில் ஆயிங்குடி தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.யோகராஜ் கலியராயன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியினை தேர்வு செய்தார். மாந்தாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஏ.பன்னீர்செல்வம் சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியினை தேர்வு செய்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்களாக பதவி உயர்வு பெற்ற இரண்டு பேருக்கும் பணி்நியமனத்திற்கான ஆணையினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார். நிறைவாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமாக நிரப்பி தங்களுக்கு வாய்ப்பளித்த தமிழக அரசுக்கும்,பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பணி நியமன ஆணையிணை பெற்ற இரண்டு தலைமையாசிரியர்களும் நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment