எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் "EDUCATION STAR" செங்கோட்டையன்..! பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி....!

Friday, November 16, 2018


டிசம்பர் மாத இறுதிக்குள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

டிசம்பர் மாத இறுதிக்குள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கரூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு மடிக்கணிணி பெறாத மாணவர்களுக்கும், ஜனவரி மாத முதல் வாரத்தில் மடிக்கணிணிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.



பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு அடியும் மிக கவனமாக எடுத்து வைக்கிறார். அந்த வகையில் கல்வி துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் செங்கோட்டையன். தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழி கல்வி கொண்டு வந்தது... சீருடையில் மாற்றம்... புதிய சிலபஸ் கொண்டு வந்தது, ஆங்கில திறனை வளர்க்க ஆங்கில புலமை பெற்ற பேராசிரியர்களை லண்டனில் இருந்து வரவழைத்தது. மருத்துவ படிப்பு சேர்வதற்கு எதிர் கொள்ள வேண்டிய நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில்... இலவச நீட் தேர்வு மையங்களை ஏற்படுத்தி கொடுத்தது.



மாணவர்கள் பள்ளி வரும் நேரம், வீடு திரும்பும் நேரம் காலை மாலை என அவர்கள் வருகை குறித்த பதிவை குறுஞ்செய்தியாக பெற்றோர்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்புவது. மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் பன்ச்சிங் முறை, ஆசிரியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தியது.



மேலும், இனி யூ டியூப் மூலம் பாடங்கள் கற்கும் முறையை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டிசம்பர் மாத இறுதிக்குள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது

1 comment

  1. நிர்வாக மாறுதல் என்ற பெரிய ஊழல் நடைபெறுகிறது

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One