எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Whatsapp, Skype-ற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா?

Tuesday, November 20, 2018


வாட்ஸ்அப், ஸ்கைப்பிற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா? #OTTRegulations

வாட்ஸ்அப்வீசாட்ஸ்கைப் போன்ற OTTசேவைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளைவிதிப்பது தொடர்பாக திட்டமிட்டு வருகிறதுட்ராய்இது எதுமாதிரியான பாதிப்புகளைஏற்படுத்தும்?
 வாட்ஸ்அப்ஸ்கைப்பிற்குப் புதுக்கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா? #OTTRegulations 
வாட்ஸ்அப்ஸ்கைப்ஹைக் போன்ற OTTபிளாட்ஃபார்ம் சேவைகளுக்குத்தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குஇருப்பதுபோலவே புதுக் கட்டுப்பாடுகள்விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறதுட்ராய்இதுதொடர்பாக கடந்தவாரம்Consultaion Paper- வெளியிட்டிருக்கும் ட்ராய்,தற்போது நிறுவனங்களின்கருத்துகளுக்காகக் காத்திருக்கிறது.ஒருவேளை OTT பிளாட்ஃபார்ம்களுக்குப்புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால்,இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும்வாட்ஸ்அப்பிலிருந்து ஃபேஸ்புக் மெசஞ்சர்வரை அனைத்து ஆப்களிலும் அதன் தாக்கம்எதிரொலிக்கும்வாட்ஸ்அப் போலவோ,ஹைக் போலவோ புதிதாக இனி எந்தவொருஆப்பும் வரமுடியாத நிலைகூட வரலாம்.எதற்காக இப்படியொரு முடிவைஎடுக்கவிருக்கிறது ட்ராய்?
நெட் நியூட்ராலிட்டியில் தொடங்கியபிரச்னை!

OTT பிளாட்ஃபார்ம்களுக்குக் கட்டுப்பாடுகள்விதிப்பது தொடர்பான சர்ச்சை இப்போதுஅல்ல; 2015-லேயே தொடங்கிவிட்டதுஅந்தவருடம் முதன்முதலில் ஏர்டெல்நிறுவனமானது ஸ்கைப்வைபர் போன்றVoIP சேவைகளுக்குத் தனிக் கட்டணங்கள்நிர்ணயித்ததுஅதாவதுவாடிக்கையாளர்கள் மொபைல் டேட்டா பேக்வைத்திருந்தாலும் கூடஅந்த டேட்டாவில்இந்த VoIP சேவைகளைப் பயன்படுத்தமுடியாதுமாறாகஇதற்கெனத் தனிரீசார்ஜ்தான் செய்யவேண்டும்இதற்குஅப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.அடுத்ததாக அதே வருடம் பிப்ரவரி மாதம்ஃபேஸ்புக் ஆனதுஇந்தியாவின்இணையவசதி இல்லாத இடங்களில் இலவசஇணையச் சேவையை வழங்குவதற்காகInternet.org எனும் திட்டத்தைச்செயல்படுத்தியது. Free Basics எனஅழைக்கப்பட்ட இந்தத் திட்டம் மூலமாககுறிப்பிட்ட சில இணையதளங்கள் மட்டும்அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக இருந்தஇந்தத் திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும்எதிர்க்கஇறுதியில் இது கைவிடப்பட்டது.இதேபோல ஏர்டெல் நிறுவனமும் குறிப்பிட்டசில இணையதளங்களுக்கு மட்டும்முன்னுரிமை தரும் ஏர்டெல் ஜீரோ எனும்திட்டத்தை அறிவித்துஅதற்கும் எதிர்ப்புகள்கிளம்பியதுஇப்படி நெட் நியூட்ராலிட்டி,ஜீரோ ரேட்டிங், OTT சேவைகளுக்கானகட்டுப்பாடுகள் அனைத்துப் பிரச்னைகளும்ஒருங்கே கிளம்பவே அனைத்துக்குஎதிராகவும் அடுத்தடுத்து ட்ராய் புதுப்புதுவிதிமுறைகளை உருவாக்கியது.அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சிலஇணையதளங்களுக்கு மட்டும் முன்னுரிமைதரும் ஜீரோ ரேட்டிங்நெட் நியூட்ராலிட்டிஆகிய இரண்டு பிரச்னைகளும் முடிவுக்குவந்தனஆனால், OTT சேவைகளுக்கும்,டெலிகாம் நிறுவனங்களுக்கும்இடையேயான தகராறு மட்டும் தீரவில்லை.தற்போது அந்தப் பிரச்னையைத்தீர்ப்பதற்காகத்தான் இந்தப் புதியஆலோசனை அறிக்கை மூலம் மீண்டும்`பஞ்சாயத்தைக்கூட்டியிருக்கிறது ட்ராய்.சரிஇவர்களுக்குள் என்ன பிரச்னை?

 à®µà®¾à®Ÿà¯à®¸à¯à®…ப்
வாட்ஸ்அப்
2013-14 வரைக்கும் டெலிகாம்நிறுவனங்களின் வருமானத்தில் பெரியபிரச்னைகள் எதுவுமில்லைஅதற்குமுந்தைய வருடம் உச்சநீதிமன்றம் 122அலைக்கற்றை ஒப்பந்தங்களைச் செல்லாதுஎன அறிவித்தது மட்டும்தான் அப்போதுடெலிகாம் துறையில் ஏற்பட்ட பெரும்அதிர்வுஆனால்அதற்கடுத்த வருடங்களில்அதைவிடவும் பெரிய அதிர்வுகள்உண்டாகினகொஞ்சம் கொஞ்சமாகவிஸ்வரூபம் எடுத்த மொபைல் இன்டர்நெட்,டெலிகாம் நிறுவனங்களின் வருவாயில்நேரடியாகக் கைவைத்ததுஅதுவரைக்கும்டெலிகாம் நிறுவனங்களின் வருமானத்தில்பெரும்பங்கு வகித்த எஸ்.எம்.எஸ் மற்றும்கால்களின் வருவாய் வெகுவாகக்குறைந்ததுமாறாக மொபைல் இன்டர்நெட்பயன்பாடும்அதன்மூலம் வந்த வருவாயும்பெருகியதுஇதைத் தொடர்ந்து வாய்ஸ்கால்களில் விட்ட லாபத்தைடேட்டாபேக்குகளின் விலை மூலம் ஈடுகட்டினஇந்நிறுவனங்கள்ஆனால், 2016-ல் வந்தஜியோ அதற்கும் முடிவுகட்டியதுகுறைவானவிலையில் அன்லிமிட்டட் டேட்டாவாய்ஸ்கால் சேவைகளை அள்ளி வழங்கவும்,பிறநிறுவனங்களும் தங்கள் விலையைக்குறைக்கவேண்டிய நிர்பந்தத்துக்குஉள்ளாகினஇதனால் மீண்டும் டெலிகாம்நிறுவனங்களின் வருவாயில் பலத்த அடிவிழுந்ததுஇந்த நெருக்கடியால் இந்தியதனியார் டெலிகாம் நிறுவனங்கள்எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது.இன்று இந்தியாவில் ஏர்டெல்வோடஃபோன்,ஜியோ ஆகிய மூன்று தனியார்நிறுவனங்களிடையேதான் போட்டி.இதுபோக அரசின் பி.எஸ்.என்.எல் சேவை.இந்த நஷ்டத்தைச் சமாளிக்கடெலிகாம்நிறுவனங்கள் தங்கள் கட்டண விவரங்களைமாற்றுவதுவேலிடிட்டி பேக்குகளைஅறிமுகப்படுத்துவது எனப் பல்வேறுநடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.இது ஏன்எதனால் என்பதை முன்பேபார்த்தோம்சரிஇப்போது OTT சேவைகளைஏன்டெலிகாம் நிறுவனங்கள்எதிர்க்கின்றன எனப் பார்ப்போம்.

ஏற்கெனவே பார்த்தது போல வாட்ஸ்அப்,மெசஞ்சர் போன்றவை டெலிகாம்நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்கிறதுஎன்பதுதான் முதல் காரணம்இன்றைக்குஇந்தியாவில் டெலிகாம் சேவைவழங்குவதற்கான ஒரு நிறுவனம்தொடங்கப்படும் என்றாலோ,நடத்தவேண்டும் என்றாலோநிறையவிதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.உதாரணமாகஅரசிடம் அனுமதி வாங்குவது,அலைக்கற்றைகளை ஏலம் எடுப்பது,ட்ராயின் ஒழுங்குமுறைகள்அரசின்சட்டத்திட்டங்களுக்குட்பட்டு நடப்பது எனப்பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.ஆனால், OTT சேவைகளுக்கு எவ்விதகட்டுப்பாடுகளும் இல்லை. OTT சேவைஎன்பது என்னஇணையம் மூலம்கிடைக்கும் அனைத்து சேவைகளுமே OTT (Over The Top) சேவைகள்தாம்இன்றுமொபைலில் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப்,மெசஞ்சர்ஃபேஸ்புக்அமேசான் பிரைம்,ஃப்ளிப்கார்ட்பேடிஎம் போன்றஅத்தனையுமே OTT-க்குள் அடங்கும்ஆனால்,டெலிகாம் நிறுவனங்கள் குற்றம்சாட்டுவதுஇவையனைத்தையும் அல்ல; VoIP (Voice over Internet Protocol) எனப்படும் இன்டர்நெட்டெலிபோன் சேவையை வழங்கும்நிறுவனங்களை மட்டும்தான்உதாரணமாக,வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் வாய்ஸ்கால்இரண்டும் டெலிகாம் நிறுவனங்களின்எஸ்.எம்.எஸ் மற்றும் வாய்ஸ்கால்சேவையைப் பாதிப்பதுஸ்கைப்வைபர்,மெசஞ்சர் போன்ற அனைத்தும்இதேபோலத்தான்இப்படி டெலிகாம்நிறுவனங்களின் சேவைகளைப் போலவே,வேறு சேவைகளை வழங்கும் OTTசேவைகளை மட்டும்தான் குறிவைக்கின்றனடெலிகாம் நிறுவனங்கள்தற்போது ட்ராயும்`OTT services as can be regarded the same or similar to the services provided by Telecom Service Providers' என்ற அடிப்படையில் இவற்றுக்குமட்டும்தான் கட்டுப்பாடுகள் விதிக்கலாமாஎனக் கேட்டிருக்கிறதுஇது முதல் பிரச்னை.
ட்ராய்யின் புது கட்டுப்பாடுகள் சரியா?
 à®Ÿà¯à®°à®¾à®¯à¯à®¯à®¿à®©à¯ புது கட்டுப்பாடுகள் சரியா?
இரண்டாவது இந்த OTT சேவைகளின்பிசினஸ் மாடல்டெலிகாம் நிறுவனங்களின்சேவைகள் அனைத்துமே அதன்உள்கட்டமைப்புகளைச் சார்ந்தே இருக்கிறது.உதாரணமாகவாய்ஸ் மற்றும் டேட்டாஇரண்டுக்கும் டெலிகாம் நிறுவனங்கள்தாம்டவர்களையோகேபிள்களையோ உருவாக்கவேண்டும்அலைக்கற்றைகளை பணம்கொடுத்து வாங்கவேண்டும்ஆனால், OTTநிறுவனங்களுக்கு இப்படியில்லை.உதாரணமாக வாட்ஸ்அப்பைஎடுத்துக்கொண்டால்வாட்ஸ்அப்வாடிக்கையாளர்களின் டேட்டாவைப்பராமரிப்பதுசர்வர்களில் கையாள்வதுபோன்ற பணிகளை மட்டும்தான்அந்நிறுவனம் செய்யும்சேவையைப்பயன்படுத்துவதற்கு டெலிகாம்நிறுவனங்களின் நெட்வொர்க்கைத்தான்பயன்படுத்தும்சேவைகளைவாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பதற்கென பிரத்யேகமாக அவர்களிடம்எந்தவொரு கட்டமைப்பும் இல்லைஇப்படிஎங்கள் நெட்வொர்க்கையே பயன்படுத்தி,எங்களுக்குப் போட்டியாகவே OTTநிறுவனங்கள் இயங்குவது சரியா எனக்கேட்கின்றன டெலிகாம் நிறுவனங்கள்.

இப்படி ஒரே சேவையை ஒரு நிறுவனம் கடும்கட்டுப்பாட்டுடனும்பொருட்செலவுடனும்,இன்னொரு நிறுவனம் எவ்விதகட்டுப்பாடுகளும் இன்றியும் வழங்க ட்ராய்அனுமதிப்பது சரியா என்பதுதான் டெலிகாம்நிறுவனங்களின் வாதம்இதற்கு மாற்றாகடெலிகாம் நிறுவனங்கள் கேட்பது, ``OTTசேவைகளுக்கு லைசென்ஸ் முறையைக்கொண்டுவர வேண்டும்அவற்றைநடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரவேண்டும்இல்லையெனில்டெலிகாம்நிறுவனங்களுக்கு OTT சேவைகள் பணம்செலுத்தவேணும் வழிசெய்யவேண்டும்"என்பதைத்தான்இதை மட்டும்வைத்துப்பார்த்தால் டெலிகாம்நிறுவனங்களின் வாதம் முழுவதும் சரிஎன்பது போலத்தான் தோன்றும்ஆனால்,இன்னொருபுறம் இந்த விதிமுறைகள்எதுமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்என்பதையும் வைத்துப்பார்க்க வேண்டும்.

Airtel Jio Vodafone
 Airtel Jio Vodafone
டெலிகாம் நிறுவனமானது முதன்மையாகஇரண்டு விதமான சேவைகளைவழங்குகிறதுமுதலாவதுவாய்ஸ்கால் /எஸ்.எம்.எஸ் போன்ற தொலைத்தொடர்புசேவைகள்இரண்டாவதுமொபைல்இன்டர்நெட் எனப்படும் இணைய சேவை.இந்த இணைய சேவையின் கீழ்தான் VoIPசேவைகளாக வாட்ஸ்அப்ஸ்கைப்அனைத்தும் வரும்இதில்ட்ராய்யின் பணிஎன்பது மொபைல் நிறுவனங்களின்பணிகளைப் பராமரிப்பதுபிரச்னைகளைத்தீர்ப்பதுஅவர்களுக்கானஅலைக்கற்றைகளை ஒழுங்குபடுத்துவது,புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதுபோன்றவை மட்டும்தான்மாறாக,வாட்ஸ்அப்மெசஞ்சர்ஸ்கைப்போன்றவற்றின் சேவைகளைகட்டுப்படுத்துவதோஒழுங்குபடுத்துவதோஅல்லஅப்படியெனில் ட்ராய் இந்தவிஷயத்தில் முடிவெடுக்க முடியுமா அல்லதுமத்திய தகவல் தொழில்நுட்பத்துறைதான்இதில் முடிவெடுக்க வேண்டுமா என்றகுழப்பம் நீடிக்கிறதுஅடுத்த சிக்கல்இந்தக்கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கம்.உதாரணமாக, OTT சேவைகளுக்குகட்டுப்பாடுகள் விதித்தால்அந்நிறுவனங்கள் கூடுதல் நிதிச்சுமையைச்சந்திக்கும்இது மக்களிடமே தாக்கத்தைஏற்படுத்தும்இரண்டாவதுஇந்தலைசென்ஸ் முறையானது புதியஸ்டார்ட்அப்கள் எதுவும் OTT விஷயத்தில்ஆதிக்கம் செலுத்தவிடாமல் செய்வதற்கானவாய்ப்பு அதிகம்அடுத்ததுஇந்த VoIPசேவைகளானது வாட்ஸ்அப்ஃபேஸ்புக்கில்மட்டுமல்லகேமிங்கில் கூட சாட்டிங்ஆப்ஷன் இருக்கிறதுஅப்படியெனில் அந்தசேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும்அல்லது கட்டணம் நிர்ணயிக்கப்படும்என்றால் வாடிக்கையாளர்களுக்கு இன்றுகிடைக்கும் கேமிங் மற்றும் சாட்டிங்அனுபவமே பாதிக்கப்படலாம்.
இதேபோல OTT நிறுவனங்கள் மீதுவைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு,அவை எவ்விதமான சட்டவிதிகளுக்கும்உட்படவில்லை என்பதுஆனால்அதையும்மறுக்கின்றன இந்நிறுவனங்கள்இந்தியஅரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் படி பாதுகாப்பு விஷயத்தில் ஏற்கெனவேOTT நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள்இருக்கின்றனஅவையே போதுமே என்பதுஇவர்கள் வாதம்மேலும், OTT நிறுவனங்கள்டெலிகாம் மீது வைக்கும் இன்னொருகுற்றச்சாட்டு இன்று டெலிகாம்நிறுவனங்களே தங்கள் எல்லையைத்தாண்டி பிற OTT சேவைகளைவழங்குகின்றனஉதாரணமாக ஏர்டெல் டிவி,ஜியோ சினிமா போன்றவைஇப்போது VoIPசேவைகளுக்கு விதிக்கப்படும்கட்டுப்பாடுகள் அடுத்து பிற OTTசேவைகளுக்கும் பரவும்போது டெலிகாம்நிறுவனங்களின் OTT சேவைகள்முன்னுரிமை பெறலாம்இதுவும்தவறுதானே என்பது எதிர்தரப்பு வாதம்சரி,அப்படியென்றால் இந்தப் பிரச்னைக்குஎன்னதான் தீர்வு?

இன்டர்நெட்
 à®‡à®©à¯à®Ÿà®°à¯à®¨à¯†à®Ÿà¯
இந்தியாவுக்கு முன்னதாகவே இந்த OTT Vsடெலிகாம் சண்டை பிறநாடுகளில்தொடங்கிவிட்டதுஇதற்கு ஐரோப்பியயூனியன் மற்றும் பிரான்ஸ்,இந்தோனேஷியாஜெர்மனி போன்றநாடுகள் அந்தந்த நாட்டின் தன்மைக்கேற்பவிதிமுறைகளையும் வகுத்துள்ளன.இதேபோல ட்ராயும் தொலைத்தொடர்புநிறுவனங்களின் பிரச்னை என்று மட்டும்பார்க்காமல்இணையத்தின் பிரச்னைஎன்றேதான் இதனை அணுகவேண்டும்.அப்போதுதான் இனி உருவாகவிருக்கும் OTTநிறுவனங்களுக்கும்இப்போது இருக்கும்டெலிகாம் நிறுவனங்களுக்கும் எந்தப்பிரச்னையும் இல்லாமல் இருக்கும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One