எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

1.95 லட்சம் மாணவியர் கடிதம் எழுதி சாதனை

Friday, December 21, 2018


திருவண்ணாமலை:பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, 1.95 லட்சம் மாணவியர், பெற்றோருக்கு கடிதம் எழுதி, சாதனை படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில், 'பெண்
குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்' என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடந்தது.


'என் கனவு' என்ற தலைப்பில், மாவட்டம் முழுவதும் உள்ள, 2,508 பள்ளிகளில் உள்ள, ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து, 940 மாணவியர், ஒரே நேரத்தில், தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி, சாதனை படைத்தனர். கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.இதில், 'உயர்கல்வி படிக்க வேண்டும்; இளம் வயதில், திருமணம் செய்து வைப்பதை கைவிட வேண்டும்; ஆண் குழந்தைகளை போல், தங்களுக்கும் சுதந்திரமாகவும், சுயமாகவும் முடிவெடுக்கும் வாய்ப்பை அளிக்க
வேண்டும்' என்பதை, வலியுறுத்தி இருந்தனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One