எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

செப்., 1ல் வகுப்புகளை துவக்க பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கு உத்தரவு

Sunday, December 30, 2018




'வரும் கல்வி ஆண்டில், செப்., 1ல் வகுப்புகளை துவக்க வேண்டும்' என, பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பி.இ., மற்றும் பி.டெக்., இன்ஜி., கல்லுாரிகளை போல, பி.ஆர்க்., என்ற, கட்டடவியல் படிப்புக்கு, தனியாக கல்லுாரிகள் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகள், மத்திய அரசின், 'கவுன்சில் ஆப் ஆர்கிடெக்சர்' என்ற, தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சிலின் அங்கீகாரத்துடன் செயல்படுகின்றன.தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள், இந்த அங்கீகாரத்தை பெற்று, அண்ணா பல்கலையின் இணைப்பில், அண்ணா பல்கலை பாட திட்டத்தை பின்பற்றுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், பி.ஆர்க்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், செப்டம்பர் இறுதி வரை நடக்கும். இதனால், வகுப்புகளை தாமதமாக துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், கவுன்சிலிங்கை ஆகஸ்டுக்குள் முடித்து, செப்.,1ல் வகுப்புகளை கட்டாயம் துவங்க வேண்டும் என, பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கு, தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One