எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகத்தில் 25 மாணவர்களுக்கு குறைவாக பயன்பெறும் 8,000 சத்துணவு மையங்கள் மூடல்: சமூக நலத்துறை ஆணையர் உத்தரவு

Monday, December 24, 2018


தமிழகத்தில் சென்னையை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் 25 மாணவர்களுக்கு குறைவாக பயன்பெறும், சுமார் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு சமூக நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது 43,205 மையங்கள் மூலம் 51 லட்சத்து 96 ஆயிரத்து 780 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை செலவிடப்படுகிறது. இந்த மையங்களில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் கேட்டு போராடி வருகின்றனர்.

இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், தமிழகத்தில் சென்னை நீங்கலாக, 31 மாவட்டங்களில் 25 மாணவர்களுக்கு குறைவாக பயன்பெறும் சத்துணவு மையங்களை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One