வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் மூன்று நாட்கள் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்க்ளை சந்தித்தார். அப்போது அவர் வானிலை குறித்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
பாலசந்திரன், “வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் மாதம் 4, 5, 6 தேதிகளில் தொடர்ந்து மழை பெய்யும்.
தமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 4 முதல் மிதமான மழை பெய்யும்.
வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் டிசம்பர் ஆறாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்

No comments:
Post a Comment