எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

போராட்டத்தில் பங்கேற்ற 4,500 ஆசிரியர்களுக்கு 17 (A) நோட்டீஸ்

Saturday, December 1, 2018




தமிழகத்தில் அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 4,500 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதிய உரிமையை குறைத்து, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை நிர்ணயம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இழந்த உரிமையை மீட்ெடடுக்கவும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தியும், கடந்த 26ம் தேதியன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், போராட்டம் நடந்தது.

மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், தங்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தி, அரசாணை 234 மற்றும் 303-ன் நகலை எரிக்க முயன்றனர். 



ஒருசில மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடந்தது. பிற இடங்களில் அரசாணை நகலை எரிக்க முயன்றதை கண்ட போலீசார், சுமார் 4,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கைது செய்து, அன்று மாலையிலேயே விடுவித்தனர். இவர்களில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமின்றி, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் உள்ளனர்.

அனைவர் மீதும், சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கோரிக்ைககளை வலியுறுத்தி கடந்த 9 ஆண்டுகளாக, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.

தற்போது, அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒருசில மாவட்டங்களில் நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், பிற மாவட்ட சிஇஓக்கள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 4,500 பேரையும் சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது’’ என்றனர்

1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One