நாடு முழுவதும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட உள்ளனர் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பிரதமர் மோடி எழுதிய ‘பரீட்சைக்கு பயமேன்’ புத்தம் வெளியீட்டு விழா, நாகர்கோவில் அருகே கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்தது. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து புத்தகத்தை வெளியிட்டார்.
முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது. மாணவர்கள் தேர்வுக்கு பயமோ, மன அழுத்தமோ இன்றி செல்லும் வகையில் ‘பரீட்சைக்கு பயமேன்’ என்ற நூலை பிரதமர் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பயனுள்ள புத்தகம் ஆகும். மாணவர்களின் முன் 2 விஷயங்கள் உள்ளன
ஒன்று போராடி வெற்றி பெற்று சாதனை நிகழ்த்துவது. மற்றொன்று சமாதானமாக போய் தோல்வியை ஏற்றுக்கொள்வது. கணினிக்கல்வி. இதில் மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைப்பதை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பள்ளியிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்
No comments:
Post a Comment