எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழக அரசு பள்ளிகளில் 814 கணினி அறிவியல் பயிற்றுனர் பட்டியலுக்கு தடை

Saturday, December 22, 2018


 திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவந்தலிங்கபுரத்தை சேர்ந்த ப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாகவுள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 2017ல் வெளியானது. ஆனால், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை. இதனிடையே,  காலியாகவுள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை டிசம்பர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரையிலான 3 மாதத்திற்கு மட்டும் தற்காலிகம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ரூ.7,500 சம்பளத்திற்கு ஆங்காங்கே நியமித்து கொள்ள அனுமதித்து, கடந்த டிச.7ல் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிக அடிப்படையிலான நியமனம் என்பது முறைகேட்டிற்கு வழிவகுக்கும். நியமன நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, கணினி ஆசிரியர் தற்காலிக நியமனத்திற்கான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். முறைப்படி விதிகளை பின்பற்றி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், தற்காலிக கணினி ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜன.10க்கு தள்ளி வைத்தனர்

தமிழக அரசு பள்ளிகளில் 814 கணினி அறிவியல் பயிற்றுனர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை அளிக்கப்பட்டுள்ளது.

814 பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப டிச.7ல் வெளியிட்ட அரசாணைக்கு ஐகோர்ட்  தடை விதித்துள்ளது.


திருச்சியில் பிரியா என்பவர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One