எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்கள் உயர்கல்விக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை வட்டார கல்வி அலுவலர்களுக்கு (B.E.O) வழங்க வேண்டுமென, கோரிக்கை

Sunday, December 9, 2018




ஆசிரியர்கள் உயர்கல்விக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை வட்டார கல்வி அலுவலர்களுக்கு (பி.இ.ஓ.,) வழங்க வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு ஏற்ப, ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் உயர்கல்வி கற்க கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். கடந்த காலங்களில் உயர்கல்வி பயில அனுமதி அளிக்கும் அதிகாரம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் இருந்தது. நிர்வாக சிரமங்களால் அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதை தவிர்க்க வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மே மாதம் கல்வித்துறை சீர்த்திருத்தம் செய்தபோது, அனுமதி அளிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாற்றப்பட்டது. இதானல் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தவிர்க்க மீண்டும் வட்டார கல்வி அலுவலர்களுக்கே அதிகாரம் வழங்க வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் அதிகாரம் இருந்தபோது, பல்வேறு குழப்பங்களால் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் பின்னேற்பு பெற முடியவில்லை. இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த குழப்பத்தை தவிர்க்க வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கே அதிகாரம் வழங்க வேண்டும். அதேபோல் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு வழங்கும் அதிகாரமும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாற்ற வேண்டும், என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One