எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் பொது முதுகலை படிப்புகளுக்கு இணை அல்ல: தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுபட்டியல் அறிவிப்பு

Saturday, December 29, 2018




 வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங் கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் அந்தந்த பொது முதுகலை படிப்புகளுக்கு இணையானவை அல்ல என்ற பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களில் வழங்கப்படும் இளங்கலை, முதுகலை பட்டபடிப்புகள் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) போன்ற அமைப்புகளின் அங்கீகாரத்தைபெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அப்படிப்புகள் மேற்படிப்புக்கும் அரசு வேலைவாய்ப்புக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

தற்போதைய கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சூழலை கருத்தில்கொண்டு ஒவ்வொரு பல்கலைக் கழகமும் சிறப்பு படிப்புகளை வழங்கி வருகின்றன. அப்படிப்புகள் அதே பிரிவில் உள்ள பொது படிப்புக்கான பாடத்திட்டத்தில் குறைந்தபட்சம் 60 சதவீதம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போதுதான், சிறப்பு படிப்புகளாக இருந்தாலும் அதற்கு இணையான பொது படிப்புக்கு சமமாக கருதப்படும்.இதற்கு பாடத்திட்டத்தை ஆய்வுசெய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் (டிஎன்பிஎஸ்சி) இணைக்குழு ஒப்புதல் அளிக்கும். அதன் அடிப்படையில் உயர்கல்வித்துறை குறிப்பிட்ட சிறப்பு படிப்பு கள் பொது படிப்புகளுக்கு சமமானவையாஇல்லையா என்பதை முடிவுசெய்து அறிவிக் கும்.

அரசாணைகள் மூலமாக..

அந்த வகையில், சென்னை பல்கலைக் கழகம் உட்பட 8 பல்கலைக்கழங்களில் வழங்கப்படும் பல்வேறுசிறப்பு முதுகலை படிப்புகள், அப்பாடப்பிரிவில் உள்ள பொது முதுகலை படிப்புகளுக்கு சமமானவை அல்ல என்ற பட்டியலை உயர்கல்வித் துறை வெவ்வேறு அரசாணைகள் மூலமாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.காம்.(கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), எம்.காம். (கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்) ஆகிய படிப்புகள், எம்காம் படிப்புக்கு, இணை கிடையாது. அழகப்பா பல்கலைக்கழகத்தின் எம்எஸ்சி. (இன்பர்மேஷன் டெக்னாலஜி) எம்எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை

சென்னை பல்கலைக்கழகத்தின் எம்எஸ்சி. (இன்பர்மேஷன் டெக்னாலஜி) படிப்பு, எம்எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை. பாரதியார் பல்கலைக்கழக எம்எப்டி, (மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்), எம்.காம். (சர்வதேச வணிகம்) படிப்புகள், எம்காம், படிப்புக்கு இணை இல்லை. எம்.எஸ்சி., படிப்பில் பல்வேறு பாட பிரிவு களான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட் டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய படிப்புகள், எம்எஸ்சி. கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ் (இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட்), எம்எஸ். இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ-காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்எஸ். சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., ஆகிய படிப்புகள் எம்எஸ்சி கணினி அறிவியலுக்கு சமமானவை இல்லைஅண்ணாமலை பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்சி சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளும், எம்எஸ்சி கணினி அறிவிய லுக்கு இணை இல்லை.

நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங் கும் எம்எஸ்சி. இன்பர்மேஷன் டெக்னாலஜி;கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன்டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய படிப்புகள், எம்எஸ்சி கணினி அறிவியல் படிப்புக்கு சமமானது இல்லை.கோவை அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம் வழங்கும் எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - எம்.ஏ., சமூகப் பணி படிப்புக்கு சமமானது கிடையாது.

இவ்வாறு அந்த அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One