எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புதிய பாடநூல் குறித்த புத்தாக்க பயிற்சி தொடக்க விழா

Thursday, December 6, 2018





புதுக்கோட்டையில் முதுகலை ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் குறித்த புத்தாக்க பயிற்சி தொடக்க விழா. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை,டிச.6 : அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறைகளில் மேற்கொள்ள புதிய பாடநூல்கள் குறித்து 11 ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான புத்தாக்க பயிற்சி தொடக்க விழா புதுக்கோட்டை சிவபுரம் ஜே.ஜே.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

தொடக்க விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நடராஜன் வரவேற்றுப் பேசினார்.

பயிற்சியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா  தலைமையேற்று  தொடங்கி வைத்துப் பேசியதாவது: நமது மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயாரிக்கும் பணியில் தாவரவியல்,விலங்கியல் மற்றும் உயிரியல் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள்.அது போல இந்தப் பயிற்சியினையும் நன்கு பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பயிற்சியினைப் பெற்று மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் இது போன்ற பயிற்சியின் வாயிலாக நீட் தேர்வு பயிற்சி மையங்களில்  மாணவர்களுக்கு  சிறப்பாக பயிற்சி அளித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான மருத்துவ மாணவர்களை உருவாக்கி தர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பயிற்சியில் மாவட்ட  ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் என்.செல்லத்துரை முன்னிலை வகித்து பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும்,இன்றியமையாமை குறித்தும் பேசினார்..

முதற்கட்டமாக இன்று டிச.6 மற்றும் 7 ஆம் தேதி முதுகலை தாவரவியல் ஆசிரியர்களுக்கும்,இரண்டாம் கட்டமாக டிச.10,11 ஆம் தேதி தாவரவியல்,விலங்கியல் ஆசிரியர்களுக்கும்,மூன்றாம் கட்டமாக டிச.12,13 விலங்கியல் ஆசிரியர்களுக்கும்,13,14 வேதியியல் ஆசிரியர்களுக்கும் நான்காம் கட்டமாக டிச.17,18 வேதியியல் ஆசிரியர்களுக்கும்,ஐந்தாம் கட்டமாக டிச.17,18 கணித ஆசிரியர்களுக்கும், டிச.18,19 இயற்பியல் ஆசிரியர்களுக்கும்,ஆறாம் கட்டமாக டிச.19,20 கணித ஆசிரியர்களுக்கும் ,   டிச.20,21 இயற்பியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடைபெறும்.பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு டிச.21,22 ஆகிய தேதிகளில் பயிற்சி நடைபெறும்.

பயிற்சியின் கருத்தாளர்களாக முதுகலை ஆசிரியர்கள் திருமேனிநாதன்,நவநீதகிருஷ்ணன்,சிராசுதீன் ஆகியோர் செயல்பட்டு பயிற்சியை வழங்கி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One