எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிகுளம் மாணவர்கள் உருவாக்கும் பள்ளிக்காடு.... முதன்மைக்கல்வி அலுவலர் நேரில் வாழ்த்து....

Tuesday, December 25, 2018


விடுமுறையை சிறப்பாவும்,பயனுள்ள விதத்திலும் கொண்டாட பள்ளிகுளத்துல  இன்னிக்கி,இதுவரை இந்தியாவுல எந்த பள்ளியும் முயற்சிக்காத , ஒரு புது முயற்சியா, 2 ஆண்டுகளா,இரண்டு ஏக்கர் பரப்பளவில்  கிராம பஞ்சாயத்துடன் இணைந்து மாணவர்கள் உருவாக்கி வரும் *பள்ளிக்காடு* என்று பெயர் வைக்கப்பட்டுள்ள  சமூக காட்டில 2000 மரக்கன்றுகள் நடும் சுற்றுச்சூழல் மன்றத்தின் சிறப்பு முகாம்  நடந்துச்சி..

இதல சிறப்பு இன்னான்னா  *விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு. முனுசாமி ஐயாவும்,* நாளைக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக விடுமுறையில் இருந்த, *செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.ரோஸ் நிர்மலா அம்மாவும்* நேர்ல வந்து வாழ்த்தி, தொடங்கி வெச்சாங்க பாருங்க,எங்க சந்தோஷத்துக்கு அளவே இல்ல.

இதோட இல்ல, நாங்க எடுக்குற எல்லா முயற்சியையும் 100% வெற்றிடையவெக்கிற மாவட்ட *சுற்றுச்சூழல்மன்ற ஒருங்கிணைப்பாளர் *திரு. சரவணன்* சாரும் , *மாவட்ட* *பசுமைப்படை* *ஒருங்கிணைப்பாளர்* திரு. *G.T. *பாலசுப்பரமணியம்* சாரும், கலந்துகிட்டது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.அதோட வல்லம் *வட்டார அலுவலர்கள்* *திரு. புருசோத்தமன்,*
*திரு. ஸ்ரீபன் ஜெயச்சந்திரன்,* *மேற்பார்வையாளர்  திரு. சிவா*, எங்க BRT வெங்கடேசனு எல்லா அதிகாரிகளும் வரிசையா கலந்துகிட்டு வாயார வாழ்தினாங்க...

எல்லாத்துக்கும் மேல லீவ கூட தியாகம் பன்னி, பணி செய்ய காத்துகிட்டிருக்கிற எங்க பசங்கள நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு. எல்லா உதவியும் செய்து மரக்கன்றுகளை வாங்கித்தந்த எங்க ஊராட்சி செயலர் ஏழுமலை சாருக்கும், எங்க உதவிக்கு வந்த ஏராளமான பெற்றோர்களுக்கும், எப்படி நன்றி சொல்ல போறோமுனு தெரியல...

இதல நாங்க எதிர்பாக்காத விஷயம் என்னென்ன இந்த வருசம் இந்த பள்ளிகூடத்த உயர்நிலை பள்ளி மாத்தபேரேனு சொல்லி, ஒரு பெரிய இன்ன அதிர்ச்சிய கொடுத்துட்டு போயிருக்காரு  முதன்மைக்கல்வி அலுவலர்....











*நன்றி...*
*மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்-* *விழுப்புரம் மாவட்டம்.*

*மாவட்ட கல்வி* *அலுவலர் அவர்கள்*
*செஞ்சி கல்வி மாவட்டம்*

*சுற்றுச்சூழல் துறை - *விழுப்புரம் மாவட்டம்*

*பள்ளிகுளம் - ஊராட்சி..*

2 comments

  1. அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Heartiest congratulations for the children. India is in it's right path.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One