மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்ட நிலையில் பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக சாதாரணமான வார்த்தைகள் அல்லது எண்களை பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்வது பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக 1,2,3,4,5,6 என்ற 6 இலக்க எண்கள் தான்மிக மோசமான பாஸ்வேர்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டு தான் 2018ஆம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றில் எளிதாக ஊடுருவ முடிந்த 5 லட்சம் பாஸ்வேர்டுகளை ஆராய்ந்ததில் சிறப்பு குறியீடுகளுடன் இயன்ற வரை நீளமானதாக உள்ள பாஸ்வேர்டே மிகவும் பாதுகாப்பானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment