பெண்களை போன்று அரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பிற்காக 730 நாட்கள் விடுப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது பெண் ஊழியர்கள், 2 குழந்தைகள் வரை வைத்திருந்தால் அவர்களை பராமரிப்பதற்காக வருடத்திற்கு 3 முறை குழந்தை பராமரிப்பு விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம் என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதே போன்று திருமணம் ஆகாத அல்லது விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண் மட்டும் தனியாக குழந்தையை பராமரிக்கும் ஊழியராக இருந்தால் அவரின் ஒட்டுமொத்த பணி காலத்தில் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம் என முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, 730 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் மட்டுமே சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட உள்ளது. 730 நாட்கள் விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட உள்ளது. முதல் 365 நாட்களுக்கு 100 சதவீதம் சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சதவீதமும் சம்பளம் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இத தவிர பெண்கள் மகப்பேறு விடுப்பாக 180 நாட்கள் வழங்கப்படுவது போல் ஆணும் 15 நாட்கள் வரை விடுப்பு கேட்க முடியும்.
No comments:
Post a Comment