சத்துணவு திட்டத்தில் பணியாற்றி அரசுத்துறைகளில் பட்டதாரி ஆசிரியர், மகளிர் ஊர்நல அலுவலர், ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் மற்றும் அரசின் மற்ற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு சத்துணவுப் பணிக்காலத்தை அடிப்படையாக கொண்டு 50 சதவீதம் பழைய ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாணையின்படி அரசாணை வெளியிட வேண்டும் எ்ன்று மேற்கண்ட துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் சென்னையில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து பட்டதாரிகள், மகளிர் ஊர்நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சங்கர் பாபு நேற்று அளித்த பேட்டி: கடந்த 15 ஆண்டுகளாக ஓய்வு ஊதியம் கேட்டு தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். அறவழியில் உண்ணாவிரதம், பேரணி, பிரச்சார இயக்கம், மாநாடு, நீதிமன்ற வழக்கு என்று அரசின் கவனத்தை ஈர்த்தோம்.அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொடர் மறியல் போராட்டம் நடுத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.
அதன்படி, பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள், ஊட்டச்சத்து மேற்பார்வையாளர்கள், கிரேடு 1 பணியாளர்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள்,சத்துணவு திட்டத்தில் பணியாற்றி 1.4.2003க்குபிறகு அரசுத் துறைகளில் பணிநியமனம் செய்யப்பட்டு, ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல்மாளிகை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஜனவரி 21, 22ம் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம்: விழுப்புரம் மாவட்டம் பெருபுகை கிராமத்தில் உள்ள ஜெயின் கோயிலில் 9 ஐம்பொன் சிலை ெகாள்ளை வழக்கில் கைதான மேகநாதன் (35), சுரேஷ் (35), அலிபாட்ஷா (எ) சவுக்கத்தலி (24), ராஜசேகர் (27), சந்தானகிருஷ்ணன் (37) ஆகியோர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்து இவர்கள் 5 பேரும் தலா ₹1 லட்சம் பிணையத்தொகை செலுத்தி தலா இருவரை ஜாமீன்தாரர்களாக நிறுத்தினர். இதை ஏற்று, தினமும் கும்பகோணம் கூடுதல் குற்றவியியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு 5 பேரும் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்டு, நீதிபதி அய்யப்பன்பிள்ளை ஜாமீன் வழங்கினார்
No comments:
Post a Comment