ஜனவரி மாத இறுதிக்குள், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, அனைத்து வகுப்பறைகளும், கம்ப்யூட்டர் மயமாக்கி, இன்டர்நெட் வசதி செய்யப்படும்'', என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே, கூகலூர் காந்தி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி மற்றும் குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 442 பேருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசின் விலையில்லா சைக்கிள்களை நேற்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, அடுத்தாண்டு தனியாரை மிஞ்சும் அளவுக்கு, வண்ண சீருடைகளாக மாற்றி அமைக்கப்படும். ஒன்பது முதல், பிளஸ் 2 வரையுள்ள அனைத்து வகுப்பறைகளும், ஜனவரி மாத இறுதிக்குள் கம்ப்யூட்டர் மயமாக்கி, இன்டர்நெட் வசதி செய்யப்படும். ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்
No comments:
Post a Comment