கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தானே நேரில் வங்கிக்கு சென்று, 4 லட்சம் ரூபாய் கல்விக்கடன் பெற்றுத் தந்ததுடன், அவர் கண்கலங்கிய சம்பவம் நெகிழச் செய்துள்ளது.
சேலம், கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சகானாஸ் பேகம் என்ற மாணவி, தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், குடும்ப வறுமை காரணமாக, கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கல்லூரி படிப்பை பாதியில் முடித்துக் கொண்டார். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அந்த மாணவியை வங்கிக்கு அழைத்துச் சென்று தானே நேரில் கல்விக்கடன் பெற்று தந்ததுடன், அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது மாணவி சகானாஸ் பேகத்தின் கண்ணீரை மாவட்ட ஆட்சியர் துடைத்துவிட்டது அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. மேலும், அந்த மாணவி குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு பேட்டியளித்தது, பொதுமக்களை நெகிழச் செய்தது
No comments:
Post a Comment