எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மரண அறிவிப்பு போராட்டம் எதிரொலி: இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு: இன்று சென்னையில் நடக்கிறது

Saturday, December 22, 2018


சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை  வலியுறுத்தி இளநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் நாளை  முதல் மரணப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் பேச்சுவார்ததை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது.  இது குறித்து பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:

பதிவு மூப்பு அடிப்படையில் தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 31.5.2009ல் பணி அமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியம்.  இந்த தேதிக்கு ஒரு நாள் பின்பு(1.6.2009) பணியில் அமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு சம்பளம் என பள்ளிக்கல்வித்துறை நிர்ணயம் செய்துள்ளது. 1.6.2009ல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களாகிய எங்களுக்கு அடிப்படை ஊதியம் 5200 என நிர்ணயம் செய்துள்ளனர். 

ஒரு நாள் முன்னதாக பணியமர்த்தப்பட்டவர்களுக்கு அடிப்படை சம்பளம் 8370 என்று நிர்ணயம் செய்துள்ளனர். இதற்கு முன்பு அமல்படுத்தப்பட்ட எந்த ஒரு ஊதியக் குழுவிலும் இதுபோன்று ஒரே பதவிக்கு இரு வேறு அடிப்படை ஊதியங்கள் நிர்ணயம் செய்தது கிடையாது. உச்சநீதி மன்ற தீர்ப்புகளுக்கும், அரசியல் சாசன சட்டப் படியும் தவறாகும். இதை களைய வேண்டும் என்று கேட்டு பல போராட்டங்கள் நடத்திய நிலையில், கடுமையான உயிர் துறக்கும் போராட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தினோம். அதில் பல ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அப்போது, கல்வித்துறையின் சார்பில் ஊதிய முரண்பாடு களைய பரிந்துரை கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
8 மாதங்களாகியும் இது வரையிலும் ஒரு நபர் குழு அறிக்கை வெளியிடவில்லை. அதனால் டிசம்பர் 23ம் தேதி மரணப் போராட்டம் அறிவித்தோம். இதையடுத்து, டிசம்பர் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மதியம் சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. இவ்வாறு ராபர்ட் கூறினார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One