பள்ளிக் கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில், தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கை:
பள்ளிக் கல்வித்துறையில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 26ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளின் அருகில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கண்டறிந்து, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளருக்கு பட்டியல் அனுப்ப வேண்டியுள்ளதால், 28ம் தேதிக்குள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பட்டியல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மாதிரிப் பள்ளிகள் என்ற பெயரில் எல்கேஜி முதல் 10ம் வகுப்பு, எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளியாக இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது கிராம ஏழை மாணவர்களை மிகவும் பாதிக்கும். ஒரே பள்ளியாக இணைத்தால், 5 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிதான் இயங்கும் நிலை ஏற்படும். இதனால் சிறுவர்கள் தொலை தூரம் செல்ல முடியாத நிலை ஏற்படும். தற்ேபாதுள்ள நிலையில், ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நிலை உள்ளது.
ஒன்றாக இணைத்தால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தொலை தூர பள்ளிகளுக்கு அனுப்புவார்களா என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். ஒன்றாக இணைக்கும் திட்டத்தி–்ன் மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானதாக அமைந்துவிடும். மேலும் இடைநிற்றலும் அதிகரிக்கும். இது ஏழை, எளிய மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகிவிடும்.
இது தவிர அரசுப் பள்ளிகளை ஒன்றாக இணைத்தால் அது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமையும். அதனால் இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். சீர் திருத்தம் என்ற பெயரில் ஆசிரியர்கள் பணியிடத்தை குறைக்க அரசு துடிக்கிறது. இது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்
விரைவில் ஏழைகள் கல்வியை இழப்பது உறுதி. தனியார் பள்ளிகள் பெருகட்டும். மக்கள் தொகை உயர்ந்ததால் சங்கடங்கள் வரத்தான் செய்யும். வாழ்க அரசியல்வாதிகள் அவர்களின் கல்விக்கூடங்கள்.
ReplyDeleteபணம் உள்ளவன் தனியார் பள்ளியை நாடுவர்.ஏழைகள் கல்வியை கைவிடுவர்.