தமிழக பள்ளிக்கல்வியில் நிர்வாக ரீதியாக பலமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்ட கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்த்தப்பட்டது.
இதற்கிடையே, புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, பிரத்யேக அலுவலகம் வழங்கப்படவில்லை. மேலும், 50 மாவட் டங்களுக்கான அதிகாரி பணியிடங்கள் கூடுதல் பொறுப்பாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட் டுள்ளதால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்படுகின்றன.இதுதொடர்பாக அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூறும்போது, ‘‘பள்ளிக்கல்வியில் 50-க்கும் அதிகமான மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.
பதவி உயர்வு அடிப்படையில் டி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டால் ஓராண்டுக்குப் பின், முதன்மைக் கல்வி அதிகாரியாக பொறுப்பேற்க முடியும். பொறுப்பு அதிகாரிகளாக இருப்பதால், பணிமூப்பு பட்டியலில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த காலிப் பணியிடங்களில் நிரந்தர அதிகாரிகளை கலந்தாய்வு மூலம் பள்ளிக் கல்வித் துறை நியமிக்க வேண்டும்’’ என்றனர்
No comments:
Post a Comment