சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் துப்புரவு பணி செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம், துடைப்பத்தை வைத்து, பள்ளிக்கல்வி வளாகத்தை சுத்தம் செய்யும் விநோத போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்களுக்கும், தங்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்குவதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் விளக்கம் அளித்தனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு காலம் தாழ்த்தினால், போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என இடைநிலை ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment