எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஊதிய உயர்வு கேட்டு உண்ணாவிரதம் : ஆசிரியர் சங்கத்திற்கு போலீஸ் உதவி

Wednesday, December 26, 2018


 ஊதிய உயர்வு கேட்டு உண்ணாவிரதம் : ஆசிரியர் சங்கத்திற்கு போலீஸ் உதவி

சென்னை: ஊதிய உயர்வு கேட்டு, ஆசிரியர்கள், குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். அரசு பள்ளிகளில், 2009 ஜூனில் நியமிக்கப்பட்டோருக்கு, 2009 மே மாதம் நியமிக்கப்பட்டவர்களை விட, 3,000 ரூபாய் அடிப்படை ஊதியம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, இடைநிலை ஆசிரியர்கள், புகார் தெரிவித்துள்ளனர். பாகுபாடின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுதொடர்பாக, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், டிச., 23 முதல், போராட்டம் அறிவிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகளுடன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.அதனால், ஆசிரியர் சங்கத்தினர், நேற்று முன்தினம் இரவு, போராட்டத்தை துவக்கினர். அவர்களை, போலீசார் கைது செய்து, எழும்பூர் ராஜரத்தினம் அரங்க வளாகத்தில், தங்க வைத்துள்ளனர். அங்கு, ஆசிரியர்கள் உண்ணா விரதம் இருக்கின்றனர்.ஆசிரியர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், அவர்களுக்கு, தற்காலிகமாக, குடிநீர் மற்றும் கழிப் பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும், உணவு உண்ண விரும்புவோருக்கு, போலீஸ் தரப்பில், இலவசமாக உணவும் தரப்படுகிறது. ஆனால், ஆசிரியர் சங்கத்தினர் ஊடகத்தினரை சந்திக்க, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One