எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஊதிய முரண்பாடுகளைக் களையுங்கள்' - மெரினா போராட்டத்தை நினைவுபடுத்திய ஆசிரியர்கள் போராட்டம்!

Tuesday, December 25, 2018


ஊதிய முரண்பாடுகளைக் களைய கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடக்கக் கல்வித்துறையில் கடந்த 2009 -ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒரே தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம்பளத்தில் முரண்பாடு நீட்டிக்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும் எனத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் ஆசிரியர்கள். அதன்படி இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை அறிவித்தனர். இதற்காக  ஆசிரியர்கள் சென்னையில் குவிந்தனர்.

ஆனால், போராட்டத்தை நிறுத்தி வைக்கப்படும் படி அரசு கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால் இன்று மாலை ஆசிரியர்கள் சுமார் 3000 -க்கும் மேற்பட்டோர் சென்னை டிபிஐ வளாகத்தில் குவிந்தனர்.

அங்கு திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்கவைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரம் என்பதால், அனைவரும் மெரினாவில் போராடியதைப் போல் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் `உண்ணவும் மாட்டோம்; உறங்கவும் மாட்டோம்' என்ற முழக்கத்தை முன்வைத்து ஆசிரியர்கள் ஸ்டேடியத்திலேயே போராடி வருகின்றனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவி வருகிறது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One