எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்கள் போராட்டம்: கட்சிகள் வேண்டுகோள்

Thursday, December 27, 2018



போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை, முதல்வர் அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர்கள், வலியுறுத்தி உள்ளனர்.அதன் விபரம்:தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை ஆசிரியர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2009 ஜூன் மாதத்திற்கு முன் நியமிக்கப்பட்டோருக்கும், அதன்பின் சேர்ந்தோருக்கும், 3,770 ரூபாய், சம்பள வித்தியாசம் உள்ளது. போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசி, அவர்களின் ஊதிய முரண்பாட்டை, முதல்வர், நீக்க வேண்டும்.பா.ம.க., இளைஞர் அணி தலைவர், அன்புமணி: தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்கள், பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும், பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில், தமிழக அரசு, ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு, மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை, முதல்வர் அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலர், தினகரன்: ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டியது, அரசின் கடமை. திரும்ப திரும்ப செய்வதாகக் கூறி ஏமாற்றாமல், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்

1 comment

  1. மாண்புமிக எதிர்கடசி தலைவர்,ஆளுங்கட்சியாகயிருந்தபோது 100000 ஆசிரியர்கள் சென்னையில் பேரணிநடத்தி மத்திய அரரசுக்கு இணையான ஊதியம்கேட்டு போராடியப்பவே வழங்கியகருந்தால் இன்று இப்போராட்டமே தேவையற்றதாகியிருக்கும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு க்குஇணையான ஊதியம் வழங்கப்படும் என உறுதிமொழிஅளிபாரா

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One