டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணித்து, அறிக்கை சமர்பிக்குமாறு, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் விதமாக, 'டிஎன் அட்டென்டன்ஸ்' என்ற பிரத்யேக 'ஆப்' வெளியிடப்பட்டது.
இதை ஆசிரியர்கள் பதிவிறக்கி, காலை, மதியம் ஆகிய, இரு வேளைகளில், மாணவர்களின் வருகைப்பதிவு விபரங்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.கடந்த அக். மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், பல பள்ளிகள், முறையாக வருகைப்பதிவு உள்ளீடு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட கல்வி அலுவலர்கள், டிஜிட்டல் வருகைப்பதிவு திட்டம் குறித்து, ஆய்வு மேற்கொள்ளுமாறு, ஒருங்கிணைந்த கல்வித்திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளில் வழக்கமான வருகைப்பதிவோடு, டிஜிட்டல் முறையிலும், மாணவர் வருகையை பதிவு செய்ய வேண்டுமென, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment