தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புராஹித் தமிழில் தனது உரையைத் தொடங்கினார். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். எளிமையான வாழ்க்கை வாழுங்கள் அது ஊழலை ஒழிக்கும் இதுவே எனது புத்தாண்டு செய்தி என்றார்.
ஆளுநர் உரையில், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலைக் கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும். திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட 1,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது
A.B அரசு ஊழியர்.ஆசிரியர்களுக்கு ரூ1000 போனஸ் 2019 ஆம் ஆண்டாவது கொடுக்க ஆவணம் செய்வார்களா?????!!!!!!!!????!!!
ReplyDelete